Saturday, July 28, 2012

-நான் கம்ப்யூட்டர் கற்றுகொண்டது

   

 
    ஓம் சக்தி --நான் கம்ப்யூட்டர் கற்றுகொண்டது என் மகனிடம்.
                    பிறகு நானே மற்ற வைகளை கற்று கொண்டேன் . இன்று ஒரு ப்ளாக்     போடும் அளவிற்கு வளர்ந்து வந்து உள்ளேன் .என்றால்
 பார்த்து கொள்ளுங்களேன்


          பசங்க படிக்க வாங்கிய கம்ப்யூட்டர் ,படிப்பு முடிந்த பின் வீட்டில் 
          கொண்டு வந்து வைத்திருந்தார்கள்,ரொம்ப நாள் மூடிவைத்திருந்தோம் .

        பையன்கள் வரும் பொழுது எல்லாம் கம்ப்யூட்டர் ரில் ஏதாவது 
        சொல்லி      கொடுப்பார்கள் .
         ஒருவர்  வெளி நாடு சென்றுடன் அவருடன் பேசுவதற்கு ,
         இன் டர்நெட் -கொடுத்து, பேசி வந்தேன் .பேசுவதோடு சரி, 
         மூடி     -வைத்துவிடுவேன் .

       இன்டர்நெட்  கொடுதிற்கி0றோம்,எதாவது பார்கலாம் படிகலாம . 
        photography  பிடிக்கும்,

       கம்ப்யூட்டர் 75 'கலீல்,BHEL நிறுவன தில் பார்த்தது ,அபோது எல்லாம் 
       கம்ப்யூட்டர் ரூம் சைஸ் 
      இருக்கும்,chekeslovekyaவில் இருந்து வந்தது .பஞ்ச் கார்டு எல் type 
      செய்து  சேர்க்கவேண்டும்

      பிறகு IBM ---கம்ப்யூட்டர் வந்தது .அது பீரோ சைஸ் இருந்தது .
     முன்னால் கண்ணாடி போட்ட பீரோ ,உள்ள சினிமா  பட ரீல் போல ,
     இரண்டு டிஸ்க் ஓடும் .அது சில சமயம் clock -சில சமயம் anti clock -இல்
     சுற்றும் .ac -ரூம்ல் வைத்திருப்பார்கள் .வெளியல்  இருந்து பர்ர்போம் .
     இப்போ இருக்கிற கம்ப்யூட்டர் வந்தது .
    அப்புறம் GM -இக்கு இப்போ இருக்கிற கம்ப்யூட்டர்கொடுத்தார்கள் 
   அவர்கள் அலங்காரமாக டேபிள் மேல் வைத்திருப்பார்கள்,அவர்கள் 
   அப்பதான் கம்ப்யூட்டர் ஐ பர்ர்த்து இருபார்கள் ,நான் கத்துகிட்டது 
   போல யாராவது tech -வந்து சொல்லி கொடுப்பார் ,இதுதான் மௌஸ்,
   இதுதான் keyboard -இங்கே கிளிக் செய்ங்க ,விண்டோ-வரும் 
   இதை செய்,அதை செய் ,என்று அ-ஆ வில் ஆரம்தித்து சொல்லி கோடுபார்.
  கொஞ்ச நாள் கழித்து மேனேஜர்-இக்கு ,
  பிறகு எல்லா லெவல் கும் ,கம்ப்யூட்டர் கொடுக்க ஆரம்பித்து ,லேப்டாப் 
  வந்து விட்டது .அப்ட்டிய பட்டகம்ப்யூட்டர் ய்  இன்று நான் (பெருமையுடன் )   இயக்க கத்து கிட்டேன் .
 இது என்ன பிரமாதம் ,நாலாவது ஐந்தாவது படிகிற பசங்க ,என்னமா -
 கேம்ஸ் கிறங்க ,face புக்,google -yahoo -அடிதடி பண்றாங்க ,இது என்ன 
 பெரிய வேலையா?சவால் விடறாங்க .

DTP-photoshop இப்பிடி எல்லா கம்ப்யூட்டர் வேலை களை கலக்குகிறார்கள்
.சரி நேரம்  ஆகி விட்டது அப்புறம் பர்ர்போம் .
  

Tuesday, July 24, 2012


தெய்வம் இல்லை என்றால் ,மனிதன் இல்லை ,
இயற்க்கை  இல்லை ,ஏன் உலகமே  இல்லை.

Sunday, July 8, 2012

ஓம் சக்தி

தொண்டு கிழககளுக்குகண ணி  என்று ,ஓர் ப்ளாக் படிதேன் ,
என்னக்கு இரவெல்லாம் தூக்கம் வரவில்லை .

என்னடஇப்பிடி போட்டுட்டாங்க ,நாமெலாம் என்ன
 கோல் வச்சிகிட்டா நடக்றோம் 
எப்பிடி சொல்லாம் ,தொண்டு கிழம் என்று .
போனா போது   தாத்தா,பாட்டன் என்று  சொலலாம்,
காந்தி  தாத்தா ,நேரு மாமா ,என்றுதான் சொல்லுவம் .
இப்பிடி தொண்டு கிழம்என்று எப்பிடி சொல்லலாம் .
நான் இதை வன்மையாக கண்டிக்கிறேன் .

நங்கள் எல்லாம் இப்பதான் தட்டிகொட்டி
ப்ளாக் போடா ஆரம்பிகிறோம்..இதுக்கு ஒத்தோரம் என்று
 இப்படி பேசுவது சரி இல்லை .

ப்ளாக் என்ன ஏது என்று தெரியரத்கே
3 மாசம் ஆச்சி,மொபைல் உள்ளதை யே
சரியாய் பார்த்து உபயோகிக நாள் ஆகுது.

இது ப்ளாக் போடறது ,கொஞ்சம் நாள் ஆகுது .
லேட்டா வந்தாலும் லேட்டடேஸ் 
ஆக் போடுவம் இல்லே .
சரி சரி ,கம்போஸ் பன்னும் பொழுது கலர் எழத்து வரவில்லை .
என்ன செய்யலாம் ?சொல்லுங்க. 

Wednesday, July 4, 2012

ஆத்தா ராக்கம்மாள் 

ஆத்தாவின் படங்கள் ஏதும் என் வசம் இல்லை என்பது ஒரு குறை ,
சிவந்த நிறம் வாட்ட சாட்ட மான உடல் வாகு ,நிமிர்த்த பார்வையும் நேர்கொண்ட குணமும் ,எனக்கு ரொம்ப பிடிக்கும் ,நல்ல உழைப்பாளி ,எருமை மாடுகள் வைத்து பால் கறந்து ,துளி கூட தண்ணிர்உற்ராமல் ,பிறருக்கு கொடுப்பது ,வீட்டிற்கு வருபர்களுக்கு ,லோட்டா என்கிற பெரிய டம்ளரில் காப்பி ,மோர் கொடுப்பது வழக்கம் ,இரக்க மனசு .நேர்மை ,சூது வாது வஞ்சனை இல்லாமை , 

நான்  வளர்ந்து பெரிய வனாக ஆனபிறகு ,ஆத்தாவிற்கு வயதான்போழுது ,அவர்கள் கன்னத்தை ,அதில் உள்ள சுருக்கங்களை விரல்களால் தடவி பார்ர்ப்பது உண்டு ,ஏன் ஆத்தா உனக்குமட்டும்  இத்தனை சுருக்கம் ,பட்டு போலிருக்கும் ,மிக வயதானால் ,நன்றாக வளமை உடன் உள்ளவர்கள் ,வயதாக வயதாக ,முகம் சுருங்கி விடும் ,
அதன் பிறகு அவர்கள் தங்கை அய் வெகு நாட்ட்களுக்பிறகு பார்த்தேன் .அவர்களுக்கும் முகம் அப்படித்தான்  இருந்தது .
                                                          ஓம் சக்தி ,


பறவை தன குஞ்சிகளை காப்பது போல,

 அடிகளார் உங்களை காத்து வருகிறார் .

Sunday, July 1, 2012

பிறப்பு

                                                      
                                                        ஓம் சக்தி 

 பிறப்பு


நான் பிறந்து  நாகப்பட்டினம் ,ஆனால் வளர்ந்து எல்ல்லாம்  பொன்மலை யில் தான் .சிறுவயது முதல் பொன்மலை ரயில்வே காலனி யில் ,northD  யில் தான்.
எனது தாத்தா வீரையன் அவர்கள் ரயில்வே  work  shop சா மில் -போர்மேன் ஆக இருத்தார்.
எனது அப்பா ராஜு அவர்களும் ரயில்வேயில் டிக்கெட்  பிரிண்டிங் யில் இருத்தார் ,பின்நாளில் ரயில்வே ரயிலின் under guard,நீங்கள் பார்த்திருக்கமுடியாது .அப்போது ரயிலின் நடுவில்ஒரு gurard இருப்பார் ,அவர் தான் underguard ,அதன் பிறகு கூட்ஸ் guard ஆக கொஞ்ச நாள் வேலை செய்த பிறகுதான் ,passanger guard , mailguard ,ஆனபின் retierd ஆகும்பொழுது   expressguard -A  (grade ) ,வேலை  செய்தார்கள் .

  தாத்தாவீரையன்  

அரைகால்காக்கிட்ராயர்,வெள்ளைசட்டையும்அணித்து ,தலை யில் தொப்பி அணித்து  வேளைக்கு செல்வார்.   இரண்டு 

வருடங்களில்,நாங்கள் F -type சென்று வசித்து வந்தோம் .

அந்த நாட்களில் வீட்டுக்கு பக்கத்தில் பூண்டு செடிகள்  வளர்ந்து  காடு  போல இருக்கும் .அதில் சிகப்பு நிற வண்ணத்தி பூச்சிகள் நிறைய பற்க்கும். அவைகளை பிடித்து வைத்து விளையாடுவது இன்றும் நினைவில் உள்ளது .

வீடுகள் எல்லாம் கருங்கல்லினால் கட்டப்பட்டது ,கோட்டை சுவர் போல இருக்கும் அந்தநாளிலிலயெ  பாதாள சாக்கடை அமைப்பு இருந்தது
அந்த பாதாள நீர் சென்று சேரும் இடங்களை பின்நாளில் சென்று பார்த்து உள்ளேன் .பெரிய கிணறுகள் ,100அடி ,200அடி ,ஆழத்தில் கட்டி ,அவேர்துள் கழிவு நீர்களை  சேகரித்து,பின் தெளிய வைத்து ,மேலுள்ள நீரை பம்ப் வைத்து இறைத்து தென்மைரங்களுக்கு விடுவார்கள் .15கிணறுகள் உள்ளது என்ன்று நினைகிறேன் .நீர் வர்ற வர்ற ,கீழே உள்ளஅழக்குகள் காய்ந்து போய் கருப்பு மன்னனாக இருக்கும் .அது உரமா பயன் படுத்த கிறது .இப்படி ஒவொரு கிணறாக உரம் எடுக்கப்படும் .பின் அதில் நீர் சேகரிக்க படும் .

பொன்மலை   காலனி யில் இருத்த நாளில் ,என்க்கு ஒரு தங்கையும் ஒரு தம்பியும் பிறந்தார்கள் .எனக்கு நன்றாக நினைவிற்க்கிறது .என் அம்மாவின் வயற்றில் ஏறி விளை யாடுவேன் ,தனம் என்று ஒரு அம்மா எங்க வீட்ட்டில் இருந்து கொண்டு அம்மாவிற்கு உதவியாக இருத்தார்கள் .அவர்கள் அன்புடன் அழைத்து ,,விஜி அம்மாவின் வயற்றில் பாப்பா இருக்குது ஏறகூடாது என்ன்று சொன்னது இன்றும் நினவில் உள்ளது