Sunday, July 1, 2012

பிறப்பு

                                                      
                                                        ஓம் சக்தி 

 பிறப்பு


நான் பிறந்து  நாகப்பட்டினம் ,ஆனால் வளர்ந்து எல்ல்லாம்  பொன்மலை யில் தான் .சிறுவயது முதல் பொன்மலை ரயில்வே காலனி யில் ,northD  யில் தான்.
எனது தாத்தா வீரையன் அவர்கள் ரயில்வே  work  shop சா மில் -போர்மேன் ஆக இருத்தார்.
எனது அப்பா ராஜு அவர்களும் ரயில்வேயில் டிக்கெட்  பிரிண்டிங் யில் இருத்தார் ,பின்நாளில் ரயில்வே ரயிலின் under guard,நீங்கள் பார்த்திருக்கமுடியாது .அப்போது ரயிலின் நடுவில்ஒரு gurard இருப்பார் ,அவர் தான் underguard ,அதன் பிறகு கூட்ஸ் guard ஆக கொஞ்ச நாள் வேலை செய்த பிறகுதான் ,passanger guard , mailguard ,ஆனபின் retierd ஆகும்பொழுது   expressguard -A  (grade ) ,வேலை  செய்தார்கள் .

  தாத்தாவீரையன்  

அரைகால்காக்கிட்ராயர்,வெள்ளைசட்டையும்அணித்து ,தலை யில் தொப்பி அணித்து  வேளைக்கு செல்வார்.   இரண்டு 

வருடங்களில்,நாங்கள் F -type சென்று வசித்து வந்தோம் .

அந்த நாட்களில் வீட்டுக்கு பக்கத்தில் பூண்டு செடிகள்  வளர்ந்து  காடு  போல இருக்கும் .அதில் சிகப்பு நிற வண்ணத்தி பூச்சிகள் நிறைய பற்க்கும். அவைகளை பிடித்து வைத்து விளையாடுவது இன்றும் நினைவில் உள்ளது .

வீடுகள் எல்லாம் கருங்கல்லினால் கட்டப்பட்டது ,கோட்டை சுவர் போல இருக்கும் அந்தநாளிலிலயெ  பாதாள சாக்கடை அமைப்பு இருந்தது
அந்த பாதாள நீர் சென்று சேரும் இடங்களை பின்நாளில் சென்று பார்த்து உள்ளேன் .பெரிய கிணறுகள் ,100அடி ,200அடி ,ஆழத்தில் கட்டி ,அவேர்துள் கழிவு நீர்களை  சேகரித்து,பின் தெளிய வைத்து ,மேலுள்ள நீரை பம்ப் வைத்து இறைத்து தென்மைரங்களுக்கு விடுவார்கள் .15கிணறுகள் உள்ளது என்ன்று நினைகிறேன் .நீர் வர்ற வர்ற ,கீழே உள்ளஅழக்குகள் காய்ந்து போய் கருப்பு மன்னனாக இருக்கும் .அது உரமா பயன் படுத்த கிறது .இப்படி ஒவொரு கிணறாக உரம் எடுக்கப்படும் .பின் அதில் நீர் சேகரிக்க படும் .

பொன்மலை   காலனி யில் இருத்த நாளில் ,என்க்கு ஒரு தங்கையும் ஒரு தம்பியும் பிறந்தார்கள் .எனக்கு நன்றாக நினைவிற்க்கிறது .என் அம்மாவின் வயற்றில் ஏறி விளை யாடுவேன் ,தனம் என்று ஒரு அம்மா எங்க வீட்ட்டில் இருந்து கொண்டு அம்மாவிற்கு உதவியாக இருத்தார்கள் .அவர்கள் அன்புடன் அழைத்து ,,விஜி அம்மாவின் வயற்றில் பாப்பா இருக்குது ஏறகூடாது என்ன்று சொன்னது இன்றும் நினவில் உள்ளது 

No comments:

Post a Comment